Latestசினிமா

வில்லன் மகேஷ் ஆனந்த் மர்ம மரணம்! போலீஸ் விசாரணை

மும்பை, பிப்.10- பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த் (வயது 57) தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 1980-90 களில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப், தர்மேந்திரா, கோவிந்தா, சஞ்சய்தத் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் மகேஷ் ஆன்ந்த்.

தமிழில் விஜயகாந்த் நடித்த பெரிய ‘மருது’, ரஜினிகாந்த் நடித்த ‘வீரா’ போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

ஆக கடைசியாக ‘ரங்கீலா ராஜா’ என்ற படத்தில் கோவிந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரி 2018 இல் வெளியானது. இவரது மனைவி மாஸ்கோ நகரில் வசித்து வருகிறார்.

மும்பை அந்தேரி பகுதியில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், மகேஷ் ஆனந்த் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையா, தற்கொலையா? என விசாரணை நடக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker