Latestசினிமா

அஜித்து வைத்து காமெடியா? -கார்த்திக் சுப்புராஜ் மீது ரசிகர்கள் கடும் கோபம்!

சென்னை, பிப். 11- அண்மையில்  ‘பேட்ட’ படத்தின்  நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் பேட்டியால் அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

‘பீட்சா’ ‘ஜிகர்தண்டா’ ‘இறைவி’ ‘மெர்குரி’ எனத் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை கொடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளி வந்த பேட்ட படம் தற்போது வரை வெற்றி நடை போடுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘தமிழ் சினிமாவில் ரஜினியை வைத்து படம் பண்ணிய நீங்கள்,  தல மற்றும் தளபதியை வைத்து படம் இயக்கினால் என்ன மாதிரியான படத்தை இயக்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, விஜய்க்கு ‘கேங்ஸ்டர்’ மாதிரியான படம் தான் பண்ணுவேன் என்றார்.

ஆனால் தல அஜித்தை வைத்து படம் பண்ணினால்… எப்படிப்பட்ட படம் என்ற கேள்விக்கு, “காமெடி  படம் தான்..,” எனப்  பதிலளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.   பேட்ட படத்துக்கு போட்டியாக வந்த விஸ்வாசம், ரஜினி படத்தைக் காட்டிலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமல்லாமல் பேட்ட டிரைலருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்ததால் அஜித்தை வைத்து காமெடி பண்ணலாம் என்று கார்த்தி சுப்பராஜ் சொல்கிறார் என தல ரசிகர்கள்  ஏகப்பட்ட கோபத்தில் கொந்தளிக்கிறார்கள். 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker