Latestஉலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் : மேலும் ஒரு பெண் எம்.பி.போட்டி!

வாஷிங்டன்,பிப்.11- அமெரிக்க அதிபர் தேர்தலிக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வுப் போட்டியில் செனட் சபை பெண் எம்.பி எலிசபெத் வாரனும் போட்டியிட போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் தற்போதைய அதிபர் டிரம்ப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர் ஆவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. இந்திய வம்சாவளி பெண் எம்.பி கமலா ஹாரிஸ் ஏற்கனவே தான் வேட்பாளர் போட்டியில் இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதே போன்று இந்திய வம்சாவளி இந்து எம்.பி துளசி கப்பார்டும் வேட்பாளர் போட்டியில் களம் இறங்கி இருக்கிறார்.

மேலும் நியூஜெர்சி எம்.பி கோரி புக்கர். நியூயார்க் எம்.பி கிர்ஸ்டன் கில் பிராண்ட் ஆகியோரும் வேட்பாளர் போட்டியில் இறங்கி உள்ளனர்.  இந்நிலையில் செனட்சபை பெண் எம்.பி எலிசபெத் வாரனும் வேட்பாளர் தேர்வுப் போட்டியில் குதித்து இருப்பதாக அறிவித்தார். 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker