Latestமலேசியா

ஆதரவற்ற குழந்தைகள் இல்ல சிறுமிகள் நால்வரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆடவர் கைது!

கோலாலம்பூர்,பிப்.11- ஸ்தாபாக், டானாவ் கோத்தாவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்றில், பதின்ம வயது சிறுமிகள் நால்வரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பராமரிப்பாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இதன் தொடர்பில், கைது செய்யப்பட்ட அந்த 20 வயது மதிக்கத்தக்க ஆடவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் ரூஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பில் அந்த ஆதரவற்ற இல்லத்துடன் தொடர்புடைய சில நபர்களும் விசாரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அந்த ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தான் கடந்த ஓராண்டு காலமாக அந்த பராமரிப்பாளரின் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி இருப்பது தொடர்பில் அவரது உறவினர் ஒருவரிடம் மனம் திறந்ததை அடுத்தே உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

அச்சிறுமியின் உறவினரான 33 வயது நோராய்ஷா இது குறித்து போலீசில் புகார் செய்தார். மேலும், மூன்று சிறுமிகளும் அந்த ஆசாமியின் இச்சைகளுக்கு பலியாகி இருப்பதையும் அவர் தம் போலீஸ் புகாரில் குறிப்பிட்டார்.

மருத்துவ பரிசோதனையில் அந்தச் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker