Latestமலேசியா

ஆளில்லா வீட்டுக்குள் ஏகப்பட்ட வெடி ஆயுதங்கள் மீட்பு!

புக்கிட் மெர்தாஜாம்,பிப்.11-புக்கிட் மெர்தாஜாம், தாமான் புக்கிட் இண்டா என்ற பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து போலீசார் ஒரு கையெறிக் குண்டு, துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்தாண்டு டிசம்பரில், போதைப்பொருள் தயாரிப்பு நடவடிக்கை நடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து சம்பந்தப்பட்ட வீட்டை சோதனையிட்டனர். அச்சமயம், அங்கிருந்து 7 லட்சம் ரிங்கிட்டு மதிப்பிலான போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.

அது குறித்து போலீஸில் புகார் செய்தவர், சம்பந்தப்ப வீட்டில் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வீட்டு உரிமையாளர் தற்போது வழங்கிய மற்றொரு புகாரை அடுத்து போலீசாட் நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு அந்த வீட்டை சோதனையிட்டதாக செபெராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் நிக் ரோஸ் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில், அந்த வீட்டில் ஏற்கெனவே வாடகைக்கு தங்கி இருந்த நபர்களை போலீசார் வலை வீசி தேசி வருகிறார்கள். அவர்களில் ஒருவன் 42 வயது ஆடவன். அவனுக்கு ஏற்கெனவே போதைப்பொருள் குற்றச்செயல் தொடர்பில் 16 குற்றப்பதிவுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker