Latestமலேசியா

‘இக்காட்டான காலம்: என் தந்தைக்கு துணை நில்லுங்கள்! -நஜிப்பின் மகள்!

கோலாலம்பூர், பிப்.11- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வாழ்க்கையில் மிகப் பெரிய சோதனைக் காலம் ஆரம்பமாகிற வேளையில், மக்கள் அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவரின் புதல்வி கேட்டுக் கொண்டார்.

குற்றவாளிக் கூண்டில் தனது தந்தை நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள வேளையில், அதில் நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர் தனது குடும்பம், நண்பர்கள், ஆதரவாளர்கள், மற்றும் பொதுமக்களின் நலனை குறித்து தான் கவலைக் கொள்வார் என்று நஜிப்பின் மகள் நூர்யானா நஜ்வா நஜிப் கூறினார்.

“நீங்கள் தான் அவரின் பலம், மற்றும் உறுதியின் அடையாளம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், நீங்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி, மனமார அவரின் நலனுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

அதுமட்டுமல்லாது, நஜிப் மக்களுடன் கைகுலுக்கும் வெள்ளை -கருப்பு புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

“பதவிகள், அதிகாரங்கள் வந்துப் போகும். சிரமப் படுவோருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்தால், அது நமக்கு மன நிம்மதியை தரும்.

“இந்தப் போராட்டத்தை நீங்கள் தொடரப் போகிறீரா? அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களின் குடும்பம் மற்றும் ஆதரவாளர்களுக்கு எவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும் என்று உங்களுக்கு தெரியுமா, இல்லையா? என்று நான் என் தந்தையிடம் கேள்வி எழுப்பினேன்.

“நபிகள் நாயகம் தனக்கு பல்வேறான சோதனைகள் எழுந்த போதிலும், தனது போராட்டத்தை நிறுத்தவில்லை. அதேப் போன்று, புதிய மலேசியா என்ற மாயை மறைந்து நிஜம் வெளிப்படும் போது, நான் என் மக்களுக்கான போராட்டத்தை தொடர்வேன் என்று என் தந்தை கூறினார்” என்று நூர்யானா நஜ்வா சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker