Latestசினிமா

இன்று அம்மாவுக்கு கல்யாணம்! ஆர்வத்தில் மகன்! மனம் நெகிழும் சவுந்தர்யா!

சென்னை, பிப். 11- மூன்று ஆண்கள் தன்னுடைய வாழ்வில் மிக முக்கியமானவர்கள் என்று இன்று திருமணம் புரிந்து கொள்ளும் ரஜினியின் மகள் சவுந்தர்யா தனது சமூக வலைகள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவர் பதிவிட்ட அந்த மூன்று புகைப்படங்களில் ஒன்று மனதை நெகிழ வைத்துள்ளது. நேற்று முன்தினம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சவுந்தர்யா மற்றும் விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தேறியது.

இன்று திருமணம் நடைபெறவுள்ள நிலையில் தன்னுடைய வாழ்வில் முக்கியமான மூன்று ஆண்கள் என்று சவுந்தர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

முதலாவது இடத்திலிருப்பது அவரது தந்தை ரஜினிகாந்த். இரண்டாவது சவுந்தர்யாவின் மகன் வேத். மூன்றாவது சவுந்தர்யாவின் மணமகன் விசாகன்.

மூன்று பேருடன் தான் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார். அதில் இரண்டாவது இடம் பெற்றுள்ள அவரது மகனுடனான புகைப்படம் மனதை நெகிழ வைத்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker