Latestமலேசியா

ஈப்போவில் தமிழர் திருநாள்! திரளானோர் வருகை!

ஈப்போ,பிப். 11-பேரா மாநில அரசு ஆதரவுடன் மலேசிய தமிழர் சங்கத்தின் பேரா மாநில கிளை ஏற்பாட்டில் சங்க மன்றங்கள் ஒருங்கிணைந்து படைத்த தமிழர் திருநாள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு, பொங்கல் , கோலம், உறியடிதல் , பூ கட்டுதல் , தோரணம் கட்டுதல் ,கரும்பு சுவைத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

அதோடு, சிறுவர்களுக்காக திருக்குறள் மனனப் போட்டி, திருக்குறள் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவைகளும் நடத்தப்பட்டன.

அதுமட்டுமின்றி, இவ்விழாவையொட்டி நேற்று இரவு, டத்தாரான் புந்தோங்கில் பாரம்பரிய பண்பாட்டுக் கலை விழா ஒன்றும் சிறப்புடன் நடைபெற்றது. இதில் மேல் குறிப்பிட்ட போட்டிகளில் வெற்றப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.

இந்த நிகழ்வில் ஏற்பாட்டுக் குழவின் சார்பில் உரையாற்றிய செயலாளர் பி.கே. குமார் ஆற்றிய உரையில் பொங்கல் விழாவிற்கு புதியதோர் அடையாளத்தை தந்து இல்லங்கள் தோறும் பொங்கல் வைத்தலை ஊக்குவிக்கும் வண்ணம் 3000 ஆயிரம் பொங்கல் பானைகளை வழங்கி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற வாய்பினை ஏற்படுத்திய மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமாட் பைசாலுக்கும் நம்பிக்கைக் கூட்டணி மக்கள பிரதிநிதிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இதனிடையே, பொங்கல் தினத்தை பொதுவிடுமுறையாகவும் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் அரசாங்கத்திடம் முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker