Latestஉலகம்

ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் யு.எஸ். இறுதி யுத்தம் தீவிரம்!

டமாஸ்கஸ், பிப்.11-  ஐ. எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து சிரியாவின் கடைசி பகுதியையும் மீட்டெடுப்பதற்கான கடும் போரில் அமெரிக்க கூட்டுப் படைகள் இறங்கியுள்ளன.

உலகையே அச்சுறுத்தி வந்தவர்கள் ஐ. எஸ் பயங்கரவாதிகள். அமெரிக்க நகரங்களில் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தி உலகையே பதற வைத்த அல்கய்டா பயங்கரவாதிகளை விட ஐ.எஸ் பயங்கரவாதிகள் மோசமானவர்கள் என்று அமெரிக்கா ஒப்புக் கொண்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா- ஈராக் நாடுகளின் முக்கிய நகரங்களை ஐ. எஸ் பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.  அவர்களை ஒழித்துக் கட்டுவது என்பது உள்நாட்டுப் படைகளுக்கு கடினமான காரியம் என்பதால் அமெரிக்கப் ப்டைகள் உதவிக்கு வந்தன்.

இதனால் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா கூட்டுப்படைகள் இவ்விரு நாடுகளிலும் களம் இறங்கின.

பல முக்கிய நகரங்களை ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து அமெரிக்கா கூட்டுப் படைகள் மீட்டெடுத்து விட்டன.  இருப்பினும், இவ்விரு நாடுகளிலும் இன்னும் 14 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ஐ. எஸ் பயங்கரவாதிகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில்,  தாங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிற கடைசி பகுதியையும் இழக்காமல் தடுக்க, அனுபவம் வாய்ந்த பயங்கரவாதிகள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர், இந்த சண்டையின் முடிவில் ஐ. எஸ் பயங்கரவாதிகள் சிரியாவில் இருந்து முழுமையாக ஒடுக்கப்பட்டு விடுவர் என்ற எதிர்பார்ப்பதாக சிரியாவின் அமெரிக்க கூட்டுப்படை தளபதிகள் கூறினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker