Latestஉலகம்

சொந்தக் கட்சிகளை இணைக்க மகிந்தா-மைத்திரி முயற்சி!

கொழும்பு, பிப்.11- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மகிந்த ராஜபக்சே இடம்பெற்றுள்ள பொது ஜன பெரமுனா கட்சியையும் இணைக்கும் முயற்சிகளில் அதிபர் மைத்திரி சிறிசேனா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான முக்கியச்  சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம் பெற்றுள்ளது. விரைவில் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் வலுவான ஒருவரை வேட்பாளராக போட்டியிட வைக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதில் மகிந்த ராஜபக்சவின் சார்பிலும் மைத்திரி சார்பிலும் அவர்களின் முக்கிய சகாக்கள் சந்தித்து பல்வேறு நிலைகளில் வாக்குகளைக் கவர இத்தகைய  இரு கட்சி இணைப்பு  எந்த வகையில் உதவும் என்பதை ஆராய்ந்தனர் தெரிகிறது.

எனினும் திட்டவட்டமான முடிவுகள்  எவையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தியா சென்றுள்ள  மகிந்த ராஜபக்சே, நாடு திரும்பியதும் இது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker