Latestமலேசியா

திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் எலிகளின் அட்டகாசம்; சிவநேசன் நடவடிக்கை!

தெலுக் இந்தான்,பிப்.11- திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் எலிகளின் தொல்லைகளால் மாணவர்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து, மாணவர்களின் சுகாதாரத்திற்கும் பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரா அரசாங்கத்தில் சுகாதார பிரிவிற்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் கூறினார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள கம்போங் கொலும்பியா தமிழ்ப்பள்ளிக்கூடம் எலிகளின் தொல்லைகளினால் பாதிப்பை எதிர்நோக்கி வந்த புகாரைத் தொடந்து அங்கு சுகாதார துறை நடவடிக்கை மேற்கொண்டது.

அப்பள்ளியில் எலி சிறுநீரின் துர்நாற்றத்துடன் மாணவர்கள் கல்வியை மேற்கொள்ள நேர்ந்தது.

அதன் பின்னர் இம்மாநிலத்தில் தெலுக் இந்தானில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியிலும் எலிகளின் தொல்லை ஏற்பட்டுள்ளதாக மற்றொரு புகாரைப பெற்றதைத் தொடந்து அந்தப் பள்ளிக்கு சிவநேசன் வருகைப் புரிந்தார்.

அவருடன் தெலுக் இந்தான் வட்டார சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும் வருகைப் புரிந்தனர்.

அதன் நிலவரம் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம அளித்த சிவநேசன், திருவள்ளுவர் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த சுகாதாரக் கேட்டிலிருந்து விடுபட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அந்தப் பள்ளியில் துப்புரவு பணியை மேற்கொள்ளவும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker