Latestமலேசியா

தேர்தல் ஆணையம் சட்டப்பூர்வமானதா? செமிஞ்சே இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிக்கை!

கோலாலம்பூர், பிப்.11- தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ நிலை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டுள்ள வேளையில், அந்த வழக்கு குறித்தான தீர்ப்பு வரும் வரையில், செமிஞ்சே இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவரான டத்தோ வான் அகமட் வான் ஒமார் அறிவுறுத்தினார்.

அந்த வழக்கு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தேர்தல் வேட்பாளர் நியமனம் மற்றும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டபோது, தேர்தல் ஆணையத்தின் ஆறு பதவிகள் காலியாக இருந்தன என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

“நடப்பு தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ தகுதி நிலை குறித்து முடிவு வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால், அதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படக் கூடும்” என்று அவர் சொன்னார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 114 (1) விதிமுறையின்படி, தேர்தல் ஆணையம் பேரரசரால் நியமிக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தில் தலைவர், துணைத் தலைவர், மற்றும் ஐந்து முக்கிய உறுப்பினர்கள் பதவிகள் நியமிக்கப் பட்டிருக்க வேண்டும் என்ற கோட்பாடு உள்ளதாக வான் அகமட் குறிப்பிட்டார்.

“தற்போதைய சூழ்நிலையில், தேர்தல் ஆணையத்தில் தலைவர் மட்டும் தான் உள்ளார். ஆணையத்தின் நான்கு உறுப்பினர்கள் இல்லாவிடில், தேர்தல் ஆணையம் கூட்டம் ஏதும் நடத்தக் கூடாது என்ற கோட்பாடு இதற்கு முன்னர் அமலில் இருந்தது” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

செமிஞ்சே இடைத் தேர்தல் குறித்தான கூட்டம், தேர்தல் ஆணையத்தின் செயலகத்துடன் நடந்தது என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அஸார் அஸிஸான் ஹரூண் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் கூட்டம் அல்லது கலந்துரையாடல் செல்லத்தக்கதா? என்பது குறித்து கேள்வி எழுப்பப் படும் என்றும், செயலகம் ஆணையர் அல்ல என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker