Latestமலேசியா

நாட்டுக்குத் தான் விசுவாசம்: தலைவர்களுக்கு அல்ல!! -மகாதீர்

புத்ராஜெயா, பிப்.11- அனைத்து பொதுச் சேவை ஊழியர்களும் நாட்டின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு தங்கள் சேவையை வழங்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவுறுத்தினார்.

நாட்டின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக சேவை வழங்கும் தலைவர்கள் மீது மட்டும் தான் பொதுச் சேவை ஊழியர்கள் நம்பிக்கை மற்றும் விசுவாசம் வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அரசியல் தலைவர்களின் அதிகாரம் மற்றும் பதவியை பார்த்து பொதுச் சேவை ஊழியர்கள் அவர்களுக்கு விசுவாசம் செலுத்தக் கூடாது என்று பிரதமர் மகாதீர் குறிப்பிட்டார்.

“அந்தத் தலைவர்கள் நாட்டின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்டால் மட்டுமே அவர்களுக்கு பொதுச் சேவை ஊழியர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்.

ஆனால், பதவியில் இருக்கும் போது, தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, தப்பான செயல்களில் அந்தத் தலைவர்கள் ஈடுபட்டிருந்தால், அவர்கள் 61 ஆண்டுகள் பதவியில் இருந்திருந்தாலும், அந்தத் தலைவர்களுக்கான தங்களின் விசுவாசத்தை பொதுச் சேவை ஊழியர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று மகாதீர் நினைவுறுத்தினார்.

கடந்தாண்டு பொதுத் தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்த தேசிய முன்னணி கூட்டணிக்கு பொதுச் சேவை ஊழியர்கள் தொடர்ந்து விசுவாசமாக இருக்கக் கூடாது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

“மலேசியா ஜனநாயகத்தை தேர்வு செய்த நாடுகளில் ஒன்றாகும். ஜனநாயக முறைப்படி, யார் வேண்டுமானாலும் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப் படலாம். அதன் அடிப்படையில், நாம் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்கலாம்.

இருந்த போதிலும், நாட்டிற்கு நன்மையளிக்கும் வகையிலான ஆட்சியை வழங்கும் தலைவர்களுக்குத் தான் நாம் நமது விசுவாசத்தை காண்பிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker