Latestமலேசியா

நாளை நடக்கவிருந்த நஜிப் வழக்கு: தள்ளிவைப்பு!

கோலாலம்பூர், பிப்,11- 1 எம்.டி.பி. நிதி நிறுவனம் தொடர்பாக நாளை உயர்நீதிமன்றத்தில் தொடங்கவிருந்த வழக்கை தள்ளிவைப்பதில் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் வெற்றி கண்டுள்ளார்.

இந்த வழக்கு முன்பு செசன்ஸ் நீதி மன்றத்தில் இருந்து உயர் நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது தொடர்பாக நஜிப் தரப்பில் செய்யப்பட்டிருக்கும் மேல் முறையீடு ஒன்றின் முடிவு தெரியும் வரை, இந்த வழக்கைத் தள்ளி வைக்க வேண்டும் என்று நஜிப், மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தார்.

அவரது மனுவை ஏற்றுக் கொண்ட மூவர் கொண்ட நீதிபதிகள் குழு, வழக்கை தள்ளி வைக்க அனுமதித்தது. நஜிப்பும் அவரது மகனும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

1எம்.டி,பி நிறுவனத்துடன் தொடர்புடைய எஸ்.ஆர்.சி. இண்டர் நேஷனல் நிறுவனத்தின் 4 கோடியே 20 லட்சம் ரிங்கிட்டை தம்முடைய சொந்த வங்கிக் கணக்கில் சேர்த்ததாக நஜிப் மீது சுமத்தப் பட்டிருந்த 3 குற்றச்சாட்டுக்கள் நாளை விசாரணைக்கு வரவிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker