Latestஉலகம்

பிரெக்ஸிட்: இங்கிலாந்து கருத்துக் கணிப்பில் திடீர் திருப்பம்

லண்டன், பிப்.11-  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது  இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது என இங்கிலாந்து 2016 இல் முடிவு எடுத்தது. அப்போது நடந்த பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இப்போது ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான பிரெக்ஸிட் (BRIEXIT) நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார்.

அவர் இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 14 ஆம் தேதி ஒரு தீர்மானம் வர உள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 53 விழுக்காட்டினர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை இங்கிலாந்து தாமதப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

அடுத்து இரண்டாவது பொது வாக்கெடுப்பு நடத்தலாம் அல்லது தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் இதற்கு வழி விட்டு பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker