Videosவாழ்க்கை

புதரில் 11 வயது சிறுமியின் சடலம்; பழிவாங்கும் செயலா? போலீஸ் விசாரணை

குவாந்தான்,பிப்.11- சித்தி மஷித்தா…. 11 வயதே ஆன சிறுமி…. அவளைக் கொன்று பழித் தீர்த்து என்ன கிடைத்துவிடப் போகிறது அந்த கொடும்பாவிக்கு..? ஆம், 11 நாட்களுக்கு முன் காணாமல் போன சித்தி மஷித்தா என்ற சிறுமி நேற்று முன்தினம் செம்பனைத் தோட்டமொன்றில் உடல் சிதைந்த நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டாள்.

அவளது உடலில் உள்ள சில உள்ளுறுப்புகள் இல்லாததால், முதலில் உடல் உறுப்புகளுக்காக அவளைக் கடத்தி இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், உண்மை அதுவல்ல. அவளது குடும்பத்தை பழி வாங்க எண்ணி, பாவம் ஒன்றும் அறியா அந்தச் சிறுமியை கொலை செய்திருப்பதாக தெரிவதாக பகாங் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் தெரிவித்துள்ளது.

பெக்கான், கம்போங் தங்சோங் மெடாங் ஹிலிரில் ஜனவரி 30-ஆம் தேதி கடைக்குச் சென்ற சித்தி மஷித்தாவை எங்குத் தேடியும் காணவில்லை என அவளது பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர். அந்த போலீஸ் புகாரை அடுத்து, மறுநாள் சந்தேகத்தின் பேரில் 23 வயதுடைய கம்போடிய ஆடவன் ஒருவனை போலீசார் கைது செய்திருந்தனர்.

கட்டையால் சித்தி மஷித்தாவை தாக்கியதாக அவனே விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளான். அவன் சித்தி மஷித்தா குடும்பத்துக்கு நன்கு அறிமுகமானவன். தொடக்கத்தில், அவன் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. எனினும், கடைசியில் அவன் நடந்த உண்மையை அவன் ஒப்புக் கொண்டுள்ளான்.

அந்த ஆடவன் சொன்னது போலசே, சித்தி மஷித்தாவின் தலையில் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதனாலேயே அவள உயிரிழந்ததாக இன்று காலையில் வெளியான சவப்பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. அதனால், உடல் உறுப்பு விநியோக நடவடிக்கைக்கும் இதற்கு சம்பந்தம் இல்லை என்று போலீஸ் தெளிவுப்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம், செம்பனைத் தோட்டத்தில் புதறொன்றில் சித்தி மஷித்தாவின் சடலம் இருப்பதை பொது மக்கள் பார்த்து தகவல் தந்தனர். சிதைந்த நிலையில் தலையும் உடலும் தனித் தனியாக கிடந்த சடலத்தைப் பார்த்து அவளது பெற்றோர் கலங்கிப் போயினர். பெற்று கண்ணும் கருத்துமாக வளர்த்தெடுத்த எந்தப் பெற்றோருக்குத்தான் பிள்ளையை இந்த நிலையில் பார்க்க இயலும்?

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker