Latestஇந்தியா

விடுதலைச் சிறுத்தையா?பாமகவா? திமுகவுக்கு மூச்சுத் திணறுகிறது!

சென்னை, பிப். 12- திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்க்கக்கூடாது என ஒரு தரப்பினரும் பாமக.வை சேர்க்கக்கூடாது என மற்றொரு தரப்பினரும் மோதி வருவதால்  திமுகவுக்குள்ளேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஸ்டாலின் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை  சேர்க்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இரு கட்சிகளையும் சேர்க்கக்கூடாது என திமுக மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பான ஸ்டாலினின் சமரசத்தையும் ஏற்க மறுத்து அவருடன் காரசார விவாதமும் நடத்தியுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச்  சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக் உட்பட ஒன்பது கட்சிகள் அணி சேர  தீர்மானித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்று அளித்த பேட்டி ஒன்றில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்கும் கட்சிகள் வெளியேறும் என்றும் தேர்தல் நேரத்தில் வேறு சில கட்சிகள் உள்ளே வரும் என்றும் புயலை கிளப்பியுள்ளார்.

திமுக அணியில் பாமக சேரும் என்றும் விடுதலைச்  சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என்பதை அவர் சூசகமாக தெரிவித்ததாக கூட்டணி கட்சியினர் கருதுகின்றனர். மதிமுக, இடது சாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் துரைமுருகனின் பேச்சால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இரு கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பதா, வேண்டாமா? என்பதில் திமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker