Latestமலேசியா

10 பூனைகள் இறந்த மர்மம்; விஷம் வைக்கப்பட்டதா?

பூச்சோங்,பிப்.11- சீனப் புத்தாண்டு விடுமுறைக்கு ஜொகூர் சென்றுவிட்டுத் திரும்பிய பூனைப் பிரியர் ஒருவர், தனது பூனைகளும், அண்டை வீட்டாரின் பூனைகளும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். அந்த 10 பூனைகளுக்கு எந்தக் கொடூரர்கள் விஷம் வைத்தது என்று தெரியவில்லை.

இக்கொடூரச் சம்பவம் சிலாங்கூர், தானாம் சவ்ஜானா பூச்சோங்கில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்துள்ளது.

49 வயது வான் என்ற அந்தப் பெண் தனது 4 பூனைகளுக்கும் சாப்பாடு கொடுத்துவிடும்படி தனது மகனின் கூட்டாளியிடம் கூறிவிட்டு குடும்பத்தாருடன் ஜொகூருக்குச் சென்றிருக்கிறார். மறுநாள் மகனின் கூட்டாளி தொலைப்பேசியில் அவரை அழைத்து இரண்டு பூனைகள் ரத்த வாந்தி எடுத்ததாகவும், பின்னர் இறந்து விட்டதாகவும் வானிடம் தெரிவித்திருக்கிறார்.

அதன் பிறகு, விடுமுறை முடிந்து சென்ற செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியதும் அவரது மற்ற இரு பூனைகள் வீட்டில் இல்லை; அவரது அண்டை வீட்டாரும் தங்களின் பூனைகளையும் காணவில்லை என்று கூறியிருக்கின்றனர். பூனைகளை எங்குத் தேடியும் காணவில்லை.

மறுநாள் பூனைகளை மீண்டும் தேடத் தொடங்கினோம். ஓரிடத்தில் பூனைகள் இறந்து கிடந்தன. அவற்றுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக தாம் சந்தேகிப்பதாக வான் கூறினார். இது குறித்து, அவர் போலீசிலும் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker