Latestஉலகம்

அதிபர் தேர்தலுக்கு முன்பாக டிரம்ப் சிறைக்கு போவார்! – பெண் செனட்டர் பேச்சு

வாஷிங்டன், பிப். 12- அதிபர் டிரம்பு தனது பதவி காலத்தில் முழுமையாக பணியாற்ற மாட்டார். 2020 ஆம் ஆண்டின்  அதிபர் தேர்தலுக்கு முன்பாக அவர் சிறைக்கு செல்வார் என செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு 2020 அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான களத்தில் மூத்த செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன் உள்ளார்.

இதற்காக அவர் ஜனநாயக கட்சியினரிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அயோவா மாநிலத்தில் ஜனநாயக கட்சியினரை சந்தித்து பேசினார்.

அப்போது அவ,ர் அதிபர் டிரம்ப் தனது பதவி காலத்தில் முழுமையாக பணியாற்ற மாட்டார். வரும் 2020 அதிபர் தேர்தலுக்கு முன்பாக அவர் சிறைக்கு செல்வார்.

இனவெறி மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தினந்தோறும் டிவிட்டரில் கருத்துக்களை பதிவிடுகிறார். உண்மையில் அந்த கருத்துகள் மிகவும் மோசமானவை. மக்கள் அந்த டிவிட்டர் பதிவுகளை நம்பி ஏமாறக்கூடாது என கூறினார். 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker