Latestமலேசியா

ஆசிரியரை தாக்கிய கும்பல்; போலீசில் புகார்!

கோலாலம்பூர்,பிப்.12- நேற்றிரவு வீட்டருகே தனது மாணவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, இந்திய ஆடவர்கள் இருவரால் தாக்கப்பட்டதாக சிவநேஷ் அருணாசலம் என்ற ஆசிரியர் ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது வைரல் ஆகி வருகிறது.

மூக்கில் ரத்தம் வழியும் தனது படத்தையும், தான் போலீசில் செய்த புகாரின் நகலையும் அவர் அப்பதிவுடன் சேர்த்து பதிவேற்றம் செய்துள்ளார்.

37 வயதான சிவநேஷ், சிலாங்கூர், சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் என்று அவரது போலீஸ் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாலான் டாமாய் 15, தாமான் டாமாய் மோரிப் பந்திங்கில் உள்ள தனது வீட்டுக்கு அருகே இரவு 8.30 மணி அளவில், மாணவர் ஒருவரிடம் சிவநேஷ் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, வெண்ணிலா என்ற பெண்மணி குடிபோதையில் இருந்த மோகன் என்ற ஓர் ஆடவருடன் அங்கு வந்திருக்கிறார். பேசிக் கொண்டிருந்த சமயத்தில் குரலை உயர்த்திய மோகன் திடீரென சிவநேசின் முகத்தில் குத்தியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, திடீரென அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மற்றோர் ஆடவர் தனது மூக்கில் ரத்தம் வரும் அளவிற்கு சிவநேஷக் குத்தியிருக்கிறார்.

பின்னர், அவர்களிடம் இருந்து தப்பிச் சென்று பந்திங் போலீஸாரை தான் தொடர்பு கொண்டதாக சிவநேஷ் அந்த போலீஸ் புகாரில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker