Latestமலேசியா

இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கி இளைஞர் பரிதவிப்பு!

கோத்தா கினாபாலு,பிப்.12- இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை மாட்டிக் கொண்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் குயின் எலிசபெத் மருத்துவமனையில் 19 வயது இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

அந்த இயந்திரத்தில் இருந்து இளைஞரின் வலது கையை எப்படி வெளியெடுப்பது என்று மருத்துவமனைத் தரப்புக்கும் தெரியாமல், அவர்கள் தீயணைப்பு மீட்புப் படையினரின் உதவியை நாடினர்.

இந்த தகவல் கிடைத்ததும் மருத்துவமனைக்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படையினர் ஹைட்ராலிக் ஆற்றல் கொண்ட ஒரு கருவியைப் பயன்படுத்தி அந்த இறைச்சி அரைக்கும் இயந்திரத்திலிருந்து அந்த இளைஞரின் வலது கையை வெற்றிகரமாக விடுவித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker