Latestஉலகம்

இலங்கை அதிபர் தேர்தல்: மகிந்தாவின் மனைவி போட்டி?

கொழும்பு, பிப்.12- நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் துணைவியாரான ஷிரந்தி ராஜபக்சே போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தலில் போட்டி போடுவதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகளில், ஷிரந்தி ராஜபக்சே தீவிரமாக ஈடுபட்டு வருவதாக ராஜபக்ச குடும்ப தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான பயணத்தில் ஈடுபட்டுள்ள மகிந்த ராஜபக்ச எதிர்வரும் அதிபர் தேர்தலில் தான் நியமிக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவது நிச்சயம் எனக் குறிப்பிட்டார்.

ராஜபக்சவின் கருத்து தொடர்பில் தூதரக அதிகாரிகள் பலர் அதிபர் வேட்பாளர் யார் என நாமல் ராஜபக்சவிடம் வினவியுள்ளனர். இதன் போது தனது தாயார் ஷிரந்தி ராஜபக்சவுக்கே அதிபர் வேட்பாளராக ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அடுத்த அதிபர் தேர்தலில் வேட்பாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ராஜபக்சேயின் பொது ஜன பெரமுனா கட்சித் தலைவர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த ஒருவரே, அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என பல தடவைகள் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker