Latestமலேசியாவிளையாட்டு

உயரம் தாண்டுதலில் நவ்ராஜ் சிங் புதிய தேசிய சாதனை!

கோலாலம்பூர்,பிப்.12- ஜெர்மனி, கெம்னிட்ஸில் நடைபெற்று வரும் 21-ஆவது எட்கர்ஸ் மன்றத் தடகள போட்டியில் களமிறங்கியுள்ள நாட்டின் முன்னணி உயரம் தாண்டுதல் வீரரான நவ்ராஜ் சிங், 2.19 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.

அந்தப் போட்டியில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

அவரது இந்தச் சாதனை ஏற்கெனவே மற்றொரு வீரரான லீ ஹப் வேய் பதிவு செய்த 2.15 மீட்டர் தேசிய சாதனையை முறியடித்துள்ளது.

தற்போது ஐரோப்பாவில் சொந்தப் பணத்தில் பயிற்சி பெற்று வரும் நவ்ராஜின் இந்தச் சாதனை பாராட்டத்தக்கது. அவர் இந்த வார சனிக்கிழமை தாயகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இளைஞர்,விளையாட்டு அமைச்சர் சைட் சடிக், நவ்ராஜுவிற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker