Latestமலேசியா

கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரு முக்கிய பேர்வழிகள் சுட்டுக் கொலை!

காஜாங்,பிப்.12- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வெளிநாட்டவர்களைக் கடத்தி வந்த கும்பலைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் இருவர் தாமான் முடும், பத்து 9-னில் இன்று அதிகாலை சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

கோலாலம்பூர் போலீஸ் தலைமையகப் போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கும்பல் கடத்திய ஆட்களை பதுக்கி வைக்கும் அந்த வீட்டை அதிகாலை 1.35 மணிக்கு காஜாங் போலீசார் சோதனையிட்டனர்.

சோதனையின்போது, அந்த இருவரும் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை மேற்கொள்ளவதும், தங்களைத் தற்காத்துக் கொள்ள போலீசாரும் எதிர்த்தாக்குதல் நடத்தினர்.

குண்டுகள் துளைத்து அந்த இரு ஆடவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களும் அந்நிய நாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்த ஆடவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, அவர்களின் கடத்தி வைத்திருந்த வங்காளதேச ஆடவரைப் போலீசார் மீட்டனர். 30 வயது மதிக்கத்தக்க அந்த வங்காளதேச ஆடவரை அவர்கள் பிப்ரவரி 8-ஆம் தேதி செந்தூலில் கடத்தியதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த வீட்டிலிருந்து ஒரு கைத்துப்பாக்கியும் ஒரு பாராங் கத்தியும் கைப்பற்றப்பட்டன.

உயிரிழந்த கடத்தல்காரர்கள் யார் என்ற தகவலை போலீசார் இன்னும் கண்டறிந்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker