Latestமலேசியா

குடியுரிமை: சிறுவர்களின் உரிமையை தடுக்காதீர்! அரசுக்கு கோரிக்கை

கோலாலம்பூர், பிப்.12- குடியுரிமை இல்லாத மூன்று சிறுவர்கள், தங்களுக்கு குடியுரிமை வழங்கப் பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணை வியாழன்றுதொடங்கவுள்ளது.

அதே வேளையில், அந்த மூன்று சிறுவர்களுக்கு எதிராக உள்துறை அமைச்சும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் எதிர்த்து வழக்காடுவதை கைவிடவேண்டும் தொடர்ந்துள்ள வழக்கு வாபஸ் செய்ய வேண்டும் என்று ‘லாயர்ஸ் ஃபோர் லிபெர்டி’ அறிவுறுத்தியுள்ளது.

அந்த மூன்று சிறுவர்களுக்கும் நியாயமாக வழங்கப் பட வேண்டிய குடியுரிமையை முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் மறுத்து விட்டது. அதே வேலையைப் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கமுன் செய்யக் கூடாது என்று அந்த அமைப்பு கூறியது.

“ஆட்சி மாறிய போதிலும், அந்தச் சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கப் படக் கூடாது என்ற வழக்கை புதிய அரசாங்கம் தொடர்வது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.

அந்த வழக்கு தொடர்பில் மறுபரிசீலனை செய்வதற்காக இருமுறை தீர்ப்பிற்கான தேதிகள் ஒத்தி வைக்கப் பட்ட நிலையில், அந்தச் சிறுவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க உள்துறை அமைச்சு மற்றும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் முயற்சித்து வருகிறது.

“பல ஆண்டுகளாக பல்வேறான சிரமங்களை அச்சிறுவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு எப்போதோ குடியுரிமை வழங்கப் பட்டிருக்க வேண்டும்.

அவர்களுக்கான உரிமைகள் நிராகரிக்கப் பட்டுள்ளன” என்று லாயர்ஸ் ஃபோர் லிபர்டி அமைப்பின் தரப்பில் லத்தீபா கோயா மற்றும் வழக்கறிஞர் என்.சுரேந்திரன் ஆகிய இருவரும் தங்களின் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

மக்கள் பலர் எதிர்நோக்கும் குடியுரிமை பிரச்சனைகள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒரு முடிவிற்கு வரும் என்று அக்கூட்டணி பிரசாரம் செய்ததாக அந்த வழக்கறிஞர்கள் அமைப்பு சுட்டிக் காட்டியது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மக்களுக்கு வழங்கிய அந்த வாக்குறுதியை நிறைவேற்றாவிடில், மக்கள் பல ஆண்டுகளுக்கு குடியுரிமை இல்லாமல் தவிப்பர் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker