Latestஇந்தியா

கேரளாவில் விஜய்க்கு தான் ரசிகர்கள் அதிகம்! -எம்.எல்.ஏவின் பேச்சால் சர்ச்சை

திருவனந்தபுரம், பிப்.12- கேரளாவில் பிறமொழிப் படங்கள் தான் அதிக வசூலை ஈட்டுகிறது என்பது சமீப காலமாகவே இருந்து வருகின்ற நிலைப்பாடுதான்.  குறிப்பாக விஜயின் படங்கள் வசூலை குவிக்கின்றன. இந்நிலையில் விஜய் படத்திற்கு வரவேற்பு அதிகம் என்று கேரளா எம்.எல்.ஏ. ஒருவர் கருத்துரைத்ததால் சர்ச்சை ஏறபட்டுள்ளது.

சமீபத்தில், இயக்குனர் ஷிரிக் குமார், விஜய் படங்களை தான் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்று கூறியிருந்ததார்  எனப்தும் குறிப்பிடத்தக்கது. விஜயின் ‘சர்கார்’ படத்திற்கு இந்தியாவிலேயே உயரமாக 175 அடி  கட் அவுட் கேரளாவில் வைக்கப்பட்டது.

தற்போது கேரள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜார்ஜிடம், மலையாள நடிகர்களை விட தமிழ்நாட்டு நடிகர் விஜய்க்கு இருக்கும் வரவேற்பு இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று  நேயர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த எம்எல்ஏ ஜார்ஜ், மலையாள நடிகர்களை விட விஜய்க்கு கேரளாவில் கூடுதலான ரசிகர்கள் உள்ளனர். ஆயிரக் கணக்கானோர் திரையரங்குகளின் முன்கூடி விஜய் கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்கின்றனர் என்று நேரடியாக கூறிவிட்டார். அவரின் அப்பேச்சு கேரளாவில் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker