Latestமலேசியா

கைதான மலேசியர்களை விடுவிக்க கம்போடியாவுடன் பேச்சு வார்த்தை

கோலாலம்பூர், பிப்.12- நோம் பென் பகுதியிலுள்ள பொய் பெட் என்ற சிறையில் அடைக்கப் பட்டுள்ள 47 மலேசியர்களை விடுவிக்க கம்போடிய அரசாங்கத்துடன் அரசு சார்பற்ற மலேசிய அமைப்பு ஒன்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

சரவாக் மற்றும் சபா மாநிலங்களின் புறநகர் பகுதியைச் சேர்ந்த அந்த 47 மலேசியர்களையும், அவர்கள் சிக்கிக் கொண்ட இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுவிப்பதற்காக தாங்கள் கம்போடிய  பிரதமர் துறை அமைச்சர் ஒக்னா ஒஸ்மான் ஹசானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்தாரா பங்சா அமைப்பின் தலைவரான முஸ்தாபா அகமட் மரைக்கான் கூறினார்.

அந்தப் பேச்சு வார்த்தையை தொடர்ந்து, அவ்விவகாரம் தொடர்பில் தாம் கம்போடிய பிரதமர் ஹன் சென்னுடன் கலந்துரையாடவிருப்பதாக அமைச்சர் ஒக்னா கூறியதாக முஸ்தாபா தெரிவித்தார்.

“கம்போடியா அமெரிக்க டாலரை பயன்படுத்துவதை எடுத்துக் காட்டாக காட்டி, அந்த மலேசியர்களுக்கு அந்நாட்டில் வேலை வாங்கித் தந்து, அதிகமான சம்பளத்தை வழங்குவதாக கூறி அந்த ஆட்சேர்ப்பு நிறுவனம், அந்த 47 மலேசியர்களை ஏமாற்றி இருக்கக் கூடும்.

“ஆனால், கம்போடியாவிற்கு சென்ற பின்னர், சட்டவிரோதமாக சூதாட்ட நிறுவனங்கள் மற்றும் சட்டவிரோத சூதாட்ட நிறுவனங்களில் கட்டாயப் படுத்தி வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளனர்” என்று அவர் அறிக்கையில் சொன்னார்.

சிறையில் அடைக்கப் பட்டுள்ள அந்த 47 மலேசியர்களும் கூடிய விரைவில் விடுவிக்கப் படுவர் என்று கம்போடியாவின் மூத்த அதிகாரிகள் ஒருவர் அறிவித்துள்ளதாக செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker