Latestமலேசியா

சீபீல்ட் ஆலயக் கலவரம் நடந்த இடத்திற்கு அடிப் மரண விசாரணை நீதிபதி வருகை!

சுபாங் ஜெயா,பிப்.12- தீயணைப்பு வீரர் முகமட் அடிப் மரண விசாரணையின் இரண்டாவது நாளான இன்று, அந்த மரண விசாரணையின் நீதிபதி கடந்தாண்டு நவம்பர் 27-ஆம் தேதி, சுபாங் தீயணைப்பு மீட்புத் துறை வாகனங்கள் இரண்டும், அடிப்பும் தாக்கப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

அடிப் மரண விசாரணை நீதிபதியான ரோப்பியா முகமட் காலை 11.20 மணிக்கு சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு அருகே உள்ள அந்தச் சம்பவ இடத்தை வந்தடைந்தார். அவருடன் அரசு தரப்பு வழக்கறிஞர் ஹம்டான் ஹம்சாவும், சுஹாகாம் தரப்பினரும், அடிப்பின் குடும்பத்தாரும் வந்திருந்தனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த தீயணைப்பு வீரர்கள் சிலரும், இதர சாட்சியங்களும் வழங்கிய வாக்குமூலம் குறித்து முதலில் ரோப்பியாவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பின்னர், அடிப் தாக்கப்பட்ட இடம், தீயணைப்பு வாகனங்கள் சேதப்படுத்த இடங்களை அவர்கள் சென்று பார்வையிட்டனர். சம்பவ நாளன்று அடிப் எவ்வாறு படுகாயம் அடைந்திருப்பார்? என்னதான் நடந்திருக்கக் கூடும் என்று அனுமானிக்கவே அங்கு அவர்கள் சென்றிருந்தனர்.

நேற்று தொடங்கப்பட்ட அடிப்பின் மரண விசாரணையின்போது, சம்பவ இடத்தில் இருந்த தீயணைப்பு வீரர் முகமட் எலிசா முகமட் நோர் என்பவர் விசாரிக்கப்பட்டார். சீபீல்ட் ஆலயத்தில் நடந்த கலவரத்தின்போது வாகனங்கள் எரியூட்டப்பட்ட நிலையில், தாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும், அப்போது தீயை அணைக்க வேண்டாம் என்று கும்பல் ஒன்று தங்களை மிரட்டியதாகவும், தீயணைப்பு வாகனங்களை தாக்கியதாகவும் அவர் விசாரணையில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker