Latestமலேசியா

டில்லி நட்சத்திர ஓட்டலில் பயங்கரத் தீ: 17 பேர் தீயில் கருகி மரணம்! -(Video)

புதுடில்லி, பிப்.12- டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைநகர் டில்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் இன்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 26 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், அறைகளில் தூங்கி கொண்டிருந்த 17 பேர் உயிரிழந்தனர்கி5 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் பலரைக் காணவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

தீயில் இருந்து தப்புவதற்காக இருவர் மேல் மாடியில் இருந்து கீழே குதித்து பரிதாபகரமாக மாண்டனர். மின்சாரக் கசிவே தீவிபத்திற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker