Latestஉலகம்

‘தி பேவரெட்’ படத்துக்கு 7 விருதுகள்

லண்டன், பிப்12- பிரிட்டன் திரைப்படத் துறையின் உயரிய கெளரவமாக கருதப்படும் பாப்தா விருதுகள், நேற்று வழங்கப்பட்டன. சிறந்த திரைப்படத்திற்கான விருதை ரோமா பெற்றுள்ளது.

பாப்தா எனப்படும் பிரிட்டன் அகாடமி என்ற அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 72-ஆவது பாப்தா விருது வழங்கும் விழா நேற்று முன் தினம் இரவு
லண்டனில் நடந்தது.

விழாவில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ரோமா, சிறந்த திரைப்படத்துக்கான விருதை பெற்றது. ஆங்கிலம் அல்லாத மொழியில் உருவாக்கப்பட்ட சிறந்த படத்திற்கான விருதையும் ரோமா பெற்றது. இந்தப் படத்தை இயக்கிய அல்போன்சா குவரோன் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுகளை பெற்றார். இதன் மூலம் ரோமா திரைப்படம் மொத்தம் நான்கு விருதுகளை பெற்றது.

சிறந்த நடிகருக்கான விருதை போகிமியன் ராப்சோடி படத்தில் நடித்த ராமி மாலேக் பெற்றார். தி பேவரெட் படத்தில் நடித்த ஒலிவியா கோல்மன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார்.

12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட “தி பேவரெட்” திரைப்படம் சிறந்த நடிகை சிறந்த பிரிட்டன் திரைப்படம் உள்ளிட்ட ஏழு விருதுகளை அள்ளியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker