Latestமலேசியா

நஜிப்பின் மேல்முறையீடு: விசாரணையை துரிதமாக கோரிக்கை

கோலாலம்பூர், பிப்.12- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் செய்துள்ள முறையீட்டு விண்ணப்பங்களை பரிசீலிப்பதை அந்நீதிமன்றம் துரிதப்படுத்த வேண்டும் என்று சட்டத்துறை தலைவர் அலுவலகம் கேட்டுக் கொள்கிறது.

அவ்விவரத்தை சட்டத்துறை தலைவர் தோம்மி தோமஸ் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலியிடம் பகிர்ந்துக் கொண்டார்.

எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பில் தம்மீது சுமத்தப் பட்டுள்ள 7 நிதி மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்த்து நஜிப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவ்விவகாரம் தொடர்பில், சட்டத்துறை தலைவர் அலுவலகம், மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி அகமட் மாரூப்பிற்கு கடிதம் அனுப்பவிருப்பதாக அவர் தெரிவித்துக் கொண்டார்.

அவ்வாறு செய்வதன் வாயிலாக, பிப்ரவரி 22-ஆம் தேதிக்குப் பின்னர், முக்கிய வழக்கு தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப் படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதியிலிருந்து 28-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் விசாரணை, மற்றும் மார்ச் மாதம் 4-ஆம் தேதியிலிருந்து 29-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் விசாரணை தேதிகள் மாற்றப் படக் கூடாது

“அந்த விசாரணையில் கால தாமதம் ஏற்படக் கூடாது என்பதற்காக அந்தத் தேதிகள் மாற்றப் படக் கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” என்று தோமஸ் விவரித்தார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker