Latestமலேசியா

புதிய பொருளாதார மன்றம் அமைப்பது ஏன்? அமைச்சர்கள் மீது அதிருப்தியா?

கோலாலம்பூர், பிப்.12- தனது அமைச்சரவை உறுப்பினர்களின் மீது அதிருப்தி ஏற்பட்டதன் அடிப்படையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் புதிய பொருளாதார மன்றத்தை அமைத்துள்ளார் என்று வெளியாகியுள்ள தகவலில் உண்மையில்லை என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

“பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஏற்கனவே வடிவமைத்த கொள்கைகளை நடைமுறை படுத்துவதற்காக தான் இந்தப் புதிய பொருளாதார மன்றம் அமைக்கப் பட்டுள்ளது” என்று அஸ்மின் செய்தியாளர்களிடம் சொன்னார்.

“மக்களின் நலன் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் போன்ற விவகாரங்களில் முக்கியத்துவம் செலுத்தி, அவற்றை சமாளிக்கும் வழியை கண்டறிவதற்காக இந்தப் புதிய பொருளாதார மன்றம் அமைக்கப் படுகிறது.

“பக்காத்தான் கூட்டணியில் முடிவுகள் அனைத்தும் அனைத்து தரப்பினராலும் தான் எடுக்கப் படுகிறது. பல துறைகளில் நிபுணத்துவம் கொண்ட நிபுணர்கள் இந்த மன்றத்தில் உட்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப் படும்” என்று அவர் குறிப்பிட்டார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker