Latestமலேசியா

பொறாமை: இந்நாள் கணவரை கத்தியால் குத்திய முன்னாள் கணவர்!

லாஹாட் டத்து,பிப்.12- தன்னுடைய முன்னாள் மனைவியின் இந்நாள் கணவர் மீது ஏற்பட்ட பொறாமையின் காரணமாக கத்திக்குத்துத் தாக்குதலில் ஈடுபட்ட முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டார்.

ஒரு பண்ணை ஊழியரான 30 வயதுடைய இந்நாள் கணவர் கைகளிலும் முகுதிலும் கடுமையான கத்திக்குத்துக் காயத்திற்கு இலக்கானதில் அவருக்கு மருத்துவமனையில் பல தையல்கள் போடப்பட்டன.

சம்பவத்தின்போது 25 வயதுடைய முன்னாள் கணவர், சம்பந்தப்பட்ட நபரை அணுகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து பல முறை அவரைக் குத்தியதாகவும் கூறப்பட்டது.

எனினும், இந்நாள் கணவரின் நண்பர்கள் சிலர் குறுக்கிட்டு, தடுத்து காப்பாற்றியதோடு, போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ததோடு தாக்குதலுக்குப் பயன்படுத்திய கத்தியையும் மீட்டுள்ளனர். இந்த நபர் கடந்தாண்டு ஜூலை மாதம் தன்னுடைய மனைவியால் விவாகரத்து செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker