உலகம்

மலாயாப் பல்கலைக்கழக தேசிய சமயப் புதிர்ப்போட்டி!

கோலாலம்பூர்,பிப்.12- மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கத்தின் முன்னிலையில் 22 ஆண்டுகளாக தேசிய சமயப் புதிர்ப்போட்டி நடத்தப்பட்டு வந்தது. அவ்வகையில், இவ்வாண்டு 23-ஆவது முறையாக தேசிய சமயப் புதிர்ப்போட்டி நாடு தழுவிய நிலையில் நடத்தப்படவுள்ளது. நம் சமுதாய மக்கள் சமயத்தை ஆழமாக அறிந்துகொள்ள இத்தகைய போட்டிகள் வழிவகுக்கிறது.

இந்த தேசிய சமயப் புதிர்ப் போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:-

இவ்வாண்டு புதிர்ப்போட்டி இருப் பிரிவனருக்கு நடத்தப்படும். அவை:

பிரிவு அ: இடைநிலைப்பள்ளி மாணவர் பிரிவு
1.இப்போட்டி குழு முறையில் நடத்தப்படுகிறது. ஒரு குழுவில், ஒரே இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மூவர் மட்டுமே இருத்தல் அவசியமாகும்.
2.புகுமுக வகுப்பு முதல் ஐந்தாம் படிவ வகுப்பு மாணவர்கள் இப்பிரிவில் கலந்து கொள்ளலாம். ஒரு குழுவில் பல வகுப்பு மாணவர்கள் கலந்து இருக்கலாம்.
3.இப்போட்டி முழுக்க முழுக்க தமிழில் நடத்தப்படுவதால், மாணவர்களுக்குத் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருப்பது சிறப்பு.

பிரிவு ஆ: உயர்நிலைப்பள்ளி/ உயர்க்கல்விக்கூட மாணவர் பிரிவு
1.இப்போட்டி குழு முறையில் நடத்தப்படுகிறது. ஒரு குழுவில், ஒரே கல்விக்கூடத்தைச் சேர்ந்த மூவர் மட்டுமே இருத்தல் அவசியமாகும்.
2. IPTA/ IPTS/ IPG/ Politeknik/ Kolej Vokasional-களில் பயிலும் மாணவர்கள் இப்பிரிவில் கலந்து கொள்ளலாம். (18 முதல் 25 வயது வரை)
3. இப்போட்டி முழுக்க முழுக்க தமிழில் நடத்தப்படுவதால், மாணவர்களுக்குத் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருப்பது சிறப்பு.

போட்டி இருச் சுற்றுகளாக நடத்தப்படும்.

முதல் சுற்று: தகுதிச் சுற்று
1.தேசிய அளவிலான புதிர்ப்போட்டியில் பங்குபெற, மாணவர்கள் கட்டாயமாகத் தகுதிச் சுற்றில் பங்குபெற்றிருக்க வேண்டும்.
2.முதல் சுற்றில் மாணவர்கள், கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு ஏற்ப கட்டுரை ஒன்றினைத் தயாரித்து வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
3.கட்டுரைக்குக் கவனிக்க வேண்டிய முக்கிய கூறுகள்.
படைப்பு : கட்டுரை மாணவர்களின் சொந்த படைப்பாக இருத்தல் அவசியம். ஒரு குழு, ஒரு கட்டுரையை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
மொழி: முழுதும் தமிழ்மொழியில், மிகக் குறைவான இலக்கணப் பிழைகளும், எழுத்துப் பிழைகளும் இருக்க வேண்டும்.
முறைமை: 650-800 சொற்களுக்குள் உயர்நிலைப்பள்ளி/ உயர்க்கல்விக்கூட மாணவர்களின் படைப்பும் 400-500 சொற்களுக்குள் இடைநிலைப்பள்ளி மாணவர்களின் படைப்பும்
இருக்க வேண்டும். கட்டுரையைக் கணினியில் ‘unicode’ எழுத்துருக்களைப் பயன்படுத்தி தட்டச்சு செய்திருக்க வேண்டும். எழுத்து அளவு 12, வரிகளுக்கான இடைவெளி 1.0, மற்றும் ‘pdf’ முறையில் சேமித்த ஆவணமாக இருக்க வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: kuizmoralsubmission@gmail.com
இறுதி நாள்: தகுதிச் சுற்றுக்கான கட்டுரைகள் அனைத்தும் 28 பிப்ரவரி 2019 (28.2.2019), மேல் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
சுய விவரங்கள்: கட்டுரையை மின்னஞ்சலில் அனுப்பும்பொழுது, உடன் பூர்த்தி செய்யபட்ட பங்கேற்பு பாரம், கல்விக்கூட அடையாள அட்டை நகலோடு(Kad Matrik Pelajar, மாணவர்கள் அக்கல்விக்கூடத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதனை உறுதி செய்வதற்கு) அனுப்புங்கள்.
கட்டுரைத் தலைப்பு:இவ்வருடம், 23-ஆம் தேசிய சமயப் புதிர்ப்போட்டியின் கருபொருளாக ‘திருவந்தாதியும் அபிராமி அந்தாதியும்’ அமைந்துள்ளது. அந்தாதி என்றால் ஆதி மற்றும் அந்தம் என பொருளாகும்.எனவே, கீழ்க்காணும் தலைப்புகளுள் எதேனும் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டி குறிப்புகளைப் பின்பற்றி தங்களின் கட்டுரை படைப்புகளை அனுப்புக.
அற்புத திருவந்தாதி
-காரைக்கால் அம்மையார் வரலாறு
– ஒரு பாடலின் விளக்கம் அல்லது அபிராமி அந்தாதி- அபிராமி பட்டர் வரலாறு
– ஒரு பாடலின் விளக்கம்
•28 பிப்ரவரி 2019-க்குள் கட்டுரையை அனுப்பும் குழுக்களே, அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அடைவர்.
•தேர்வுப்பெற்ற குழுக்களைச், சமய புதிர்ப்போட்டியின் செயற்குழு 20 மார்ச் 2019 மின்னஞ்சல் வழி தொடர்புக்கொள்ளும்.
•அடுத்த சுற்றுக்குத் தேர்வுப் பெற்றிருந்தால், புதிர்ப்போட்டிக்குத் தயார் செய்ய கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்களையும் கருப்பொருள்களையும் ‘pdf’ முறையில் மின்னஞ்சல் வழி அனுப்பி வைக்கப்படும். போட்டி அன்று நடைப்பெறும் சுற்றுகள் திருவந்தாதி மற்றும் அபிராமி அந்தாதி சார்ந்தும் சமயம் சார்ந்தும் அமைந்திருக்கும்.

பரிசு விவரங்கள் கீழ்வருமாறு :
•முதல் நிலை : ரி.ம. 1000
•இரண்டாம் நிலை : ரி.ம. 750
•மூன்றாம் நிலை : ரி.ம. 500

மேல் விவரங்களுக்கு “Persatuan Hindu Universiti Malaya” என்ற முகநூலை அனுகலாம்
அல்லது லுவிந்திரன் சுகுமாரன் (018-2135337)-ஐ/ நாகேஸ்வரி (011-36049983) -யை/ யாஷ்ணவி (014-9207819 )-யைத் தொடர்பு கொள்ளலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker