Latestமலேசியா

மலேசியாவில் பெண்களைவிட ஆண்கள் 10 லட்சம் பேர் அதிகம்!

கோலாலம்பூர்,பிப்.12- மலேசிய மக்கள் தொகையில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகம். பெண்களைவிட ஆண்கள் 10 லட்சம் பேர் கூடுதலாக உள்ளனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2018-ஆம் ஆண்டில் மக்களின் தொகை 1.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது, 2017-ஆம் ஆண்டில் 3 கோடியே 22 லட்சமாக இருந்த மக்கள் தொகை கடந்தாண்டில் 3 கோடியே 26 லட்சமாக அதிகரித்ததாக புள்ளி விவரத் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் முகமட் உஷிர் சொன்னார்.

2018-ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளில் 65 ஆயிரத்து 800 பேர் ஆண் குழந்தைகள். 61 ஆயிரத்து 600 பேர் பெண் குழந்தைகள் என்று அவர் சொன்னார். எனினும், 2017-ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டில் 2.5 விழுக்காட்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிந்துள்ளது.

சிலாங்கூர்தான் அதிகமக்கள் தொகையைக் கொண்ட மாநிலம். 65 லட்சம் பேர் இங்கு உள்ளனர். மிகக் குறைந்த மக்கள் தொகைக் கொண்ட பகுதி புத்ராஜெயாவாகும். இங்கு, 91,900 பேர் மட்டுமே உள்ளனர்.

2017-இல் இறப்பு எண்ணிக்கை 42,200 பேர் ஆகும். கடந்தாண்டில், இறந்தோர் எண்ணிக்கை 41,400 பேர் ஆகும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker