Latestமலேசியா

யாரை குறி வைத்து கிண்டல் செய்கிறார் நஜிப்?

கோலாலம்பூர்,பிப்.12- 14-ஆவது பொதுத் தேர்தலில் தோல்வி… 1எம்பிடி ஊழல் விவகாரம்… அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் என பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் அவற்றுக்கெல்லாம் சற்றும் மனம் தளராதவராகவே முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் இருக்கிறார்.

உண்மையைச் சொல்லப் போனால், இப்போதுதான் அவர் மிக உற்சாகமாக இருக்கிறார். அதற்கு தக்கச் சான்றாக அவரது சமூகஊடக பதிவுகள் இருக்கின்றன.

அந்த வகையில், இன்று தனது பேஸ்புக் பக்க முகப்பு படத்தை மாற்றி வலைவாசிகளை தன் வசம் ஈர்த்துள்ளார் நஜிப்.

ஓரிரு வாரமாக, பக்காத்தான் அரசியல்வாதிகளின் பட்டக் கல்வி குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளை எல்லாம் நஜிப் கலாய்த்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், எல்லோரையும் கலாய்த்த நஜிப்பின் நொட்டிங்ஹம் பல்கலைக்கழக பட்டம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆனால், அட போங்கய்யா… என்னையும் பார்… நான் பட்டம் பெற்ற படத்தையும் பார் என்று நஜிப் தான் பட்டம் பெற்ற படத்தை பேஸ்புக் முகப்பு படமாக வைத்துள்ளார் நஜிப்.

அந்த படத்தை, 85,000-கும் மேற்பட்டோர் ‘லைக்’ செய்துள்ளனர். 4,000-க்கும் மேற்பட்டோர் அந்த படத்தை தங்களின் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட 7,000 பேர் அந்தப் படத்துக்கு ‘காமெண்ட்’ செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker