
கோலாலம்பூர், பிப்.12- முன்னாள் ரொம்பின் எம்.பி.யும் தொழிலதிபருமான காலஞ்சென்ற டான்ஶ்ரீ ஜமாலுடின் ஜாரிஸின் 85 வயதுடைய தாயார் அமினா அப்துல்லா, தன்னுடைய இரு பேரப்பிள்ளைகள் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.
சுமார் 130 கோடி ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களுக்கு தாங்கள்தான் டிரஸ்டிகள் என்பதை அந்த இரண்டு பேரப்பிள்ளைகளும் தமக்கு தெரிவிக்காமல் போனதன் அடிப்படையில் அவர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.
தனது வழக்கறிஞர் நிறுவனம் மூலம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி அமினா அப்துல்லா இந்த வழக்கை பதிவு செய்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி ஜமாலுடின் ஜாரிஸ் இறந்து விட்டார்.
அதன் பின்னர் அவரது இதர மூன்று நிறுவனங்களின் சொத்து விபரங்களை அவரது (ஜமாலுடின் ஜாரிஸ்) சொத்து விபர நிர்வாகத்தில் சேர்க்கத் தவறி விட்டனர் என பேரப்பிள்ளைகள் மீது அவர் வழக்குப் பதிவு செய்தார்.