Latestமலேசியா

கட்சி தாவியோர் மீது அம்னோ வழக்கா? – எம்.பி. விளக்கம்

புத்ராஜெயா, பிப்.13- அம்னோவிலிருந்து வெளியாகி, பிரிபூமி மலேசியா கட்சிக்கு தாவிய தனக்கு அம்னோ இதுவரை எவ்வித வழக்குக்கான சம்மனையும் அனுப்பவில்லை என்று உலு திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ரோசோல் வாஹிட் கூறினார்.

“இதுவரை எனக்கு எவ்வித சம்மன்களும் அனுப்பப்படவில்லை. மற்றவர்களுக்கு சம்மன்கள் ஏதும் அனுப்பப் பட்டதா என்பது குறித்து எனக்கு ஏதும் தெரியாது. வேண்டுமென்றால் அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று பிரிபூமி கட்சி உறுப்பினர் அட்டையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிடம் இருந்த பெற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவ்வாறு சொன்னார்.

மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்னோ உறுப்பினர்கள், இதர கட்சிகளுக்கு தாவினால், அவர்கள் மீது அம்னோ நடவடிக்கை எடுக்கும் என்று இதற்கு முன்னர் அம்னோ கட்சி அறிவித்திருந்தது.

கடந்த 14-ஆவது பொதுத் தேர்தலின் போது, அம்னோ கட்சியின் கீழ் போட்டியிட்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப் பட்ட வேட்பாளர்கள், வேறு கட்சிகளுக்கு தாவினாலோ அல்லது தங்களை சுயேட்சை உறுப்பினர்களாக அறிவித்துக் கொண்டாலோ, அம்னோவின் கீழ் போட்டியிட்டதற்காக அவர்களுக்கு செலவு செய்யப்பட்ட தொகையை அவர்கள் திருப்பித் தர வேண்டும் என்று அம்னோ அண்மையில் கூறியிருந்தது.

அதுமட்டுமல்லாது, தேசிய முன்னணி கூட்டணியின் கீழ் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற அவர்கள், அக்கூட்டணியிலிருந்து வெளியேறும் பட்சத்தில், தங்களின் பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அம்னோ தெரிவித்திருந்தது. அவ்வாறான விதிமுறைகள் அமலில் உள்ளதா? என்பது குறித்து தமக்கு தகவல் ஏதும் தெரியாது என்று லாருட் எம்பி டத்தோஸ்ரீ ஹம்சா ஸைனுடின் கூறினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker