Latestமலேசியா

நெகிரி செம்பிலானில் தண்ணீர் கட்டணம்: அதிகரிப்பு இல்லை!

சிரம்பான், பிப்,13-குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நெகிரி செம்பிலானில் தண்ணீர்க் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்று அம்மாநில மந்திரி புசார் அமினுடின் ஹருன் சொன்னார்.

பயனீட்டாளர்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தக் கூடாது என்ற காரணத்திற்காக தண்ணீர்க் கட்டணத்தை உயர்த்துவதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றார் அவர்.

வீடுகள், வர்த்தகப் பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகிய எவற்றுக்கும் தண்ணீர்க் கட்டணம் உயர்த்தப்படாது என்று அவர் சொன்னார். நெகிரி குடிநீர் வாரியம் தொடர்ந்து தரமான தண்ணீர் சேவை வழங்கி வரும் என்று அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker