Latestமலேசியா

பெண்ணின் முகத்தை கிழித்த வங்காளதேசக் காதலன்!

கோலாலம்பூர்,பிப்.13- ஜாலான் SS 20/27, டாமான்சாரா ஜெயா, பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பேரங்காடி ஒன்றில், வங்காளதேச ஆடவன் ஒருவன் பெண்மணி ஒருவரின் முகத்தை கூர்மையான ஆயுதத்தால் கிழித்ததால் அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம், கடந்த வார வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

கூர்மையான ஆயுதத்தால் கிழித்ததால், அந்த 24 வயது பெண்ணுக்கு உதட்டிலிருந்து வலது பக்க கன்னம் வரை மிக ஆழமான காயம் ஏற்பட்டது.

அவர் உடனடியாக மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்ட வேளை, பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதையடுத்து, மறுநாள் சம்பந்தப்பட்ட வங்காளதேச ஆடவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவ்வாடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் காதலன் என்று விசாரணையில் தெரியவந்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker