Latestமலேசியா

மெல்ல எழுகிறது ரிங்கிட் மதிப்பு; ஆண்டு இறுதியில் மேலும் வலுவடையும்!

கோலாலம்பூர், பிப்.13- 2019-ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 3.8 ரிங்கிட் என்ற நிலையை மலேசிய கரன்சி எட்டிவிடக் கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அண்மைய ஆண்டுகளாக அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4 ரிங்கிட்டும் குறையவேயில்லை என்கிற நிலை, இவ்வாண்டில் முறியடிக்கப் படக்கூடும்.
தொடர்ச்சியாக இவ்வாண்டில் ரிங்கிட் வலுவடைந்து 2019-இன் இறுதியில் 3.80-ஐ எட்டிவிடலாம் என்று ஆர்எச்பி ஆய்வு கூறுகிறது.

மலேசியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்ந்துவருவது மலேசிய கரன்சி வலுப்பெற உதவிகரமாக இருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரைக்குமான கணக்கின்படி 700 மில்லியன் டாலரில் இருந்து மலேசிய அன்னிய செலாவணி கையிருப்பு 102.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் ரிங்கிட்டின் இவ்வாண்டு இறுதிக்குள் 3.80 என்கிற அளவில் நிலைப் படுவதற்கான வலுவான பாதையில் முன்னேறி வருகிறது. அமெரிக்க டாலரின் பலவீனமும் இதற்குக் காரணமாகும்.

அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி நிலையும் மந்தப்படுகிறது. இதனால் அமெரிக்க அரசாங்கம் தனது விகிதாசார அதிகரிப்பை நிறுத்தி வைக்க்க் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவின் அன்னிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட உயர்வு, ஒருவகையில் மலேசியக் கரன்சி வலுவடைவதற்கு உந்துதலாகி வருகிறது என்று ஆர்எச்பி ஆய்வு சுட்டிக்காட்டியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker