Latestமலேசியா

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி; 1,112 பேரை கைது செய்ய உத்தரவு

அங்காரா, பிப்.14- துருக்கியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சியில் சம்பட்டவர்கள் என நம்ப்படும் 1,112 பேரை கைது செய்யும்படி  அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அதிபர் தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் அதிபர் அந்த புரட்சியை அவர் முறியடித்தார்.

அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மதகுரு பெத்துல்லா குலென் தான் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப் எர்டோகன் குற்றம் சாட்டினார். இவ்விவகாரம் தொடர்பாக தற்போது வரை போலீஸ் அதிகாரிகள் ராணுவ வீரர்கள் என 77 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது மதகுரு குலெனுடன் தொடர்புடைய மேலும் 1,112 பேரை கைது செய்ய துருக்கிநுல்துறை அமைச்சு  உத்தரவிட்டுள்ளது.  இவர்களைக் கைது செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இராணுவப் புரட்சிக்கு உதவும் நோக்கில்  போலீஸ் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டுதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker