Latestஉலகம்

பெண்களை மதிக்காத டிரம்பை எதிர்க்க 5 பெண்கள் தீவிரம்!

நியூயார்க், பிப். 14- அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த முறை டிரம்பை எதிர்த்து 5 பெண்கள் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது.

தற்போது வரை அக்கட்சியை சேர்ந்த 12 பேர் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில் 5 பேர் பெண்கள்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் முதல் இந்து எம்பியுமான துளசி கப்பார்ட், நியூயார்க் எம்.பி கிர்ஸ்டன் கில்பிராண்ட், மாசசூசெட்ஸ் எம்.பி எலிசபெத் வாரன், மற்றும் மின்னசோட்டா எம்.பி அமி குளோப்சர் ஆகிய 5 பெண்களே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளவர்கள்.

அமெரிக்க வரலாற்றில் இதுவரை பெண் ஒருவர், அதிபராக தேர்வானது இல்லை. கடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டார். அத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தால் முதல் பெண் அதிபர் என்ற அந்தஸ்தை பெற்றிருப்பார்.

இந்நிலையில் ஜனநாயக கட்சியில் உள்ள 5 பெண்களில் ஒருவர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டால் டிரம்ப் மீண்டும் ஒரு பெண்ணை எதிர்த்து போட்டியிட வேண்டிய சூழல் ஏற்படும்.

டிரம்ப் பெண்களை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதால் அவருக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுவதாக கூறப்படுகிறது. எனவே, டிரம்ப் எதிர்த்துப் போட்டியிட பெண் வேட்பாளரையே ஜனநாயக கட்சி தெரிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker