Latestமலேசியா

மனைவியை கற்பழிக்கும் கணவனை தடுக்க சட்டத் திருத்தம் தேவை! -மகளிர் அமைப்பு

கோலாலம்பூர், பிப்.14- தாம்பத்ய வாழ்வில் ஈடுபட விருப்பம் கொள்ளாத மனைவிமார்களை வலுக்கட்டாயமாக கற்பழிக்கும் கணவன்மார்களுக்கு தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் இடம் உண்டு என்று மகளிர் உதவி அமைப்பு கோரிக்கை விடுத்தது.

அவ்வாறான பலாத்காரங்கள் நிறுத்தப் பட வேண்டும் என்ற அடிப்படையில், அவ்வாறான செயல்களுக்கு எதிராக சிங்கப்பூர் மசோதா தாக்கல் செய்துள்ள வேளையில், மலேசிய அரசாங்கமும், அந்த வன்செயலுக்கு எதிராக சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் சுமித்ரா விஸ்வநாதன் வலியுறுத்தினார்.

மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும், பிரிட்டிஷ் (சிவில்) சட்டத்தை பின்பற்றி வருகின்றன. கற்பழிப்பு குற்றங்களுக்கு குற்றவியல் சட்டத்தின் 375-ஆவது பிரிவின் கீழ் தண்டனை வழங்கப் பட்டு வருகிறது.

அதே வேளையில், மனைவிக்கு எதிரான கணவனின் பலாத்காரத்திற்கு அச்சட்டத்தில் விதிவிலக்கு வழங்கப் பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

“திருமணம் செய்துக் கொண்ட பல பெண்கள், தங்களின் கணவர்களால் பலாத்காரம் செய்யப் படுகின்றனர். இது மிகப் பெரிய குற்றமாக கருதப் பட வேண்டும். சட்டத்தில் கணவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள விதிவிலக்கை அகற்றும் வகையில் திருத்தம் செய்யப் பட வேண்டும். கற்பழிப்புகள் எவரால் நிகழ்த்தப் பட்டாலும், கறபழிப்புதான். அதனை யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று மகளிர் அமைப்பு வலியுறுத்தியது.

“வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களில் 11 விழுக்காட்டினர், தங்களின் சொந்த கணவர்களால் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளனர் என்று புள்ளி விவரம் காட்டுகின்றன.

இந்தக் கொடூரச் செயல் தொடரக் கூடாது என்ற அடிப்படையில், அரசாங்கம் விரைவில் அதற்கு எதிராக சட்டத் திருத்தத்தை அறிவிக்க வேண்டும்” என்று சுமித்ரா அறிவுறுத்தினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker