Latestமலேசியா

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அறுவர் கைது

கோலாலம்பூர், பிப். 15 – ஜோகூர், சிலாங்கூர் மற்றும் சபாவில் கடந்தாண்டு டிசம்பர் 19லிருந்து ஜனவரி 28 வரை மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் துடைத்தொழிப்பு நடவடிக்கையில் இரு மலேசியர்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ஃபுஸி ஹருண் தெரிவித்துள்ளார்.

அதில் சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், வங்காளதேசம் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் அடங்குவார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த 48 வயதான வர்த்தகர் டிசம்பர் 19இல் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சிரியாவில் செயல்பட்டுவரும் ஆக்கெல் சைனாலுடன் அணுக்க உறவில் இருந்ததோடு நிதியுதவியைச் செய்ததோடு புதிய உறுப்பினர்களைச் சேர்த்தும் உள்ளார்.

தீவிரவாதத்துக்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து வந்த 31 வயதான வங்காளதேசி ஒருவர் டிசம்பர் 19இல் கிள்ளானிலும் இரு மலேசியர்கள் ஜனவரி 10லும், அபு சய்யாப் தீவிரவாதக் குழுவின் உறுப்பினரும் சுடும் ஆயுதங்களைக் கையாளும் திறன் பெற்ற 21 வயது பிலிப்பைன்ஸ்காரர் ஜனவரி 19இல் கோத்தா கினபாலுவிலும் கைது செய்யப்பட்டதாகவும், தீவிரவாதி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்த தெற்காசியாவைச் சேர்ந்த 26 வயது நபர் பூச்சோங்கில் ஜனவரி 26லும் கைது செய்யப்பட்டதாக ஃபுஸி ஹருண் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் 2002ஆம் ஆண்டு பதுகாப்பு நடவடிக்கை(சிறப்புக் குற்றங்கள்) சட்டத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker