Latestசினிமா

“பட வாய்ப்பில்லையா? அழுது வடிய முடியாது’- ஶ்ரீ தேவிமகள் ஜான்வி

மும்பை, பிப்.15- ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூர் நடித்து வெளியான ‘தடாக்’ படத்துக்கு பெரிய வரவேற்பும் கிடைக்கவில்லை.

அடுத்துத்து படவாய்ப்புகள் கிடைக்கும், தன் தாய் ஸ்ரீதேவியைப் போல முன்னணி நடிகையாகி விடுவார், என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் ஜான்வி கபூரை தமிழ்,தெலுங்கு படங்களில் நடிக்க வைக்க அவரது தந்தை போனி கபூர் திட்டமிட்டு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

இதற்காக பிரபல தென் மாநிலங்களை சேர்ந்த இயக்குனர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார் போனிகபூர்.ஆனால் ஜான்வியோ, ஆரம்பத்தில் தான் ஒரு நடிகையாக வேண்டும் என்ற அடம்பிடித்த அவர், இப்போது மாறிவிட்டார்.

அது பற்றி எந்த கவலையும் இல்லாமல் மும்பையில் நடக்கும் வி.ஐ.பிக்களின் வீட்டு திருமணங்கள்,விருந்து நிகழ்ச்சிகள் என தன் தங்கை குஷியுடன் பங்கேற்று வருகிறார்.

சினிமா வாய்ப்பு வந்தால் பார்க்கலாம். வராவிட்டால் அதற்காக அழுது வடிந்து கொண்டிருக்க முடியுமா? என தத்துவார்த்தம் பேசுகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker