Latestமலேசியா

45 ஆண்டுகளுக்கு முன் பட்டதாரியாக நஜிப்!

கோலாலம்பூர்,பிப்.14- “நான் நொட்டிங்ஹம் பல்கலைக்கழக பட்டதாரி என்பதை இன்னும் நம்பவில்லை? இதோ பாருங்கள், 1974-ஆம் ஆண்டில் நடந்த பட்டமளிப்பு விழாவின்போது நான் எடுத்த படம்” என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தனது பேஸ்புக் முகப்பு படத்தை மாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி, தனது தாயார் துன் ராஹாவுடனும் தம்பி ஜொஹாரியுடனும் எடுத்துக் கொண்ட படத்தையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

“அப்போது இங்கிலாந்தில் ஆண்களும் முடி நீளமாக வைத்திருப்பதுதான் டிரேண்ட். ஆமாம், ஒப்புக்கொள்கிறேன். சிறு வயதில் நானும் இந்த டிரேண்டிங்கை எல்லாம் பின்பற்றியவன் தான்” என்று நஜிப் அந்த படத்துடன் பதிவு ஒன்றையும் எழுதிள்ளார்.

இந்த 45 ஆண்டுகால படத்தை தனது தாயார் வீட்டிலிருந்து மகன் அஷ்மான் ஒரு மணி நேரமாக தேடிக் கண்டுபிடித்து எடுத்ததாக நஜிப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“இதற்கு பிறகு ஜசெக என்னை நம்பவில்லை என்றால் நான் ஒன்று செய்ய முடியாது. ரிவைண்ட் பட்டனை அழுத்தி 1974-ஆம் ஆண்டுக்குச் சென்றுதான் அவர்கள் பார்க்க வேண்டும்” என்றும் அவர் கிண்டலாகக் கூறியுள்ளார்.

2004-ஆம் ஆண்டு நொட்டிங்ஹம் பல்கலைக்கழகத்தில் தாம் பெற்ற பட்டத்தை நஜிப் பெருமிதமாக பகிர்வதற்கு முன்னர், கடந்த 1974-ஆம் ஆண்டு தாம் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்களை நஜிப் வெளியிட வேண்டும் என்று கெரான்ஜி சட்டமன்ற உறுப்பினர் சோங் செமின் அறிவுறுத்தி இருந்தார்.

அதனை அடுத்தே, நஜிப் 1974-ஆம் ஆண்டு தான் பட்டம் பெற்ற படத்தை பேஸ்புக்கில் நேற்று பதிவேற்றம் செய்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker