Latestஉலகம்

90 நாளில் வரவேண்டிய மரணம்: 15 ஆண்டுகளுக்கு பின் வந்தது! -நாசா

நியூயார்க், பிப்.15- செவ்வாய்க் கிரகத்தில் 90 நாள்கள் மட்டும் செயல்படத்தக்க வகையில் அனுப்பப்பட்ட ‘ஆபர்ச்சுனிட்டி’ என்ற விண்கலம்15 ஆண்டுகள் வாழ்ந்து தற்போது முற்றிலுமாக செயலிழந்து இருப்பதாகதாக நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வ அறிவித்தனர்.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 2003 ஆம் ஆண்டு இந்த விண்கலத்தை நாசா அனுப்பியது.

2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செவ்வாய்க் கிரகத்தில் இறங்கிய இந்த விண்கலம், 3 வாரங்கள் கழித்து தனது பணியை தொடங்கியது. இதன் ஆயுட்காலம் 90 நாட்கள் என்று கணிக்கப் பட்டது. ஆனால் 15 ஆண்டுகளாக இந்த விண்கலம் சிறப்பாக செயல்பட்டு அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.

இந்த விண்கலம் , லேசர் மூலம் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து வந்தது. இந்நிலையில் செவ்வாய்க் கிரகத்தில் கடந்த ஜூன் மாதம் மிகவும் மோசமான புயல் வீசியதால் அதில் சிக்கிய சற்று செயல் இழந்தது.

இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 15 ஆம் தேதி. இரவு செவ்வாய்க் கிரகத்தில் வீசிய பெரிய புயல் மொத்தமாக ஆக்கிரமித்து இதனால் காணாமல் போன விண்கலத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மேலும் சூரிய ஒளி கிடைக்காததால் மின்னூட்டம் இல்லாமல் விண்கல ஓடத்தின் 6 சக்கரங்களும் செயல் இழந்தன.அதன் பின் நாசா ஒரு முறை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே அது முற்றாக செயலிழந்து விட்டது என்பதை நாசா அறிவித்து இருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker