Latestமலேசியா

உயிருடன் 23 அலுங்குகளை கடத்திய நபர் கைது!

கோத்தா கினபாலு, பிப். 16- சரவாக்கிலிருந்து 23 அலுங்குகளை உயிருடன் கடத்தி வந்த நபர் போலீசாரிடம் பிடிபட்டார்.

விற்பனைக்காக அந்த அலுங்குகள் சரவாக், லாவாஸில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும், கெம்போங்-தெனோம் சாலையில் வெள்ளிக்கிழமை காலை 11.50க்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டதோடு கடத்தப்பட்ட 23 அலுங்குகளும் மீட்கப்பட்டன.

வனவிலங்கு இலாகாவின் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட அறுவர் சோதனை நடவடிக்கையில், அந்த ‘சுண்டா’ அலுங்குகள் காரின் பொருள்கள் வைக்கும் பின் பகுதியில் வைக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவை சபாவின் கெனிங்காவிற்கு விற்பனைக்காகக் கொண்டு செல்வதற்காகக் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker