Latestமலேசியா

சவூதி இளவரசர் வருகை: மலேசியாவில் முதலீடுகள் அதிகரிக்கும்!

கோலாலம்பூர், பிப்,16 – சவூதி அரேபிய இளவரசர் முகம்மட் சல்மான் நாளை முதன்முறையாக மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ளவிருக்கும் நிலையில் மலேசியாவுக்கு கூடுதலான முதலீடுகள் வந்து சேரும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

குறிப்பாக, எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோல் இராசயனத் துறைத் தொடர்பான அம்சங்களில் கூடுதல் முதலீடுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட துறைகளில், ஆசியாவின் பல பகுதிகளில் சவூதி அரேபியா முதலீடு செய்து வருகிறது. அந்த வகையில் ஜொகூர் பெங்கெராங்கிலுள்ள பெட்ரோனாஸ் சுத்திகரிப்பு, பெட்ரோல் இராசயனத் தொழிலில் சவூதி கூடுதல் முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. இதில், ஏற்கெனவே சவூதி கணிசமான முதலீட்டைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2030 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலை மட்டுமே நம்பியிருக்கும் தனது நிலையில் இருந்து மாற்றம் காணும் தூர நோக்குச் சிந்தனையுடன் சவூதி செயல்படுவதால், மலேசியாவின் அனுபவங்களை சில துறைகளில் பகிர்ந்து கொள்ள சவூதி ஆர்வம் கொண்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker